செப்டம்பர் 18ல் சிறப்புக் கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது . மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பியதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 10ம்தேதி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இதன் பின்னர் ஆகஸ்டு 11ம் தேதியுடன் நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் நிறைவடைந்தது. மழைகால கூட்டத்தொடரில் கிட்டத்தட்ட 24 மசோதாக்கள் நிறைவேற்றியதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் செப்டம்பரில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இந்த நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும். 5 அமர்வுகளாக இந்த சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஐந்து அமர்வுகளாக நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.