நிலவில் குழந்தையை போல் உலாவும் பிரக்யான் ரோவர்! பாதுகாப்பாக சுற்றிவருவதை படம்பிடித்து அனுப்பிய விக்ரம் லேண்டர்!

நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாகச் சுற்றி வரும் புதிய விடியோ ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான்…

நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாகச் சுற்றி வரும் புதிய விடியோ ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

முதலில் லேண்டர் தரையிறங்கிய நிலையில் பின்னர் ரோவரும் தரையிறங்கி நிலவு மேற்பரப்பின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்களின் மூலமாக நிலவின் மேற்பரப்பில் கந்தகம்(சல்ஃபா்) இருப்பதை பிரக்யான்’ ரோவா் கண்டறிந்துள்ளதாகவும் ஹைட்ரஜனுக்கான தேடல் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்தது.

தொடர்ந்து, பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளை இஸ்ரோ விடியோ மூலமாகவும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், நிலவில் பாதுகாப்பாக ரோவர் சுற்றி வரும் விடியோவை வெளியிட்டுள்ள இஸ்ரோ, ‘பாதுகாப்பான பாதையைத் தேடி ரோவர் சுழற்றப்பட்டபோது லேண்டர் விக்ரம் இதனை படம்பிடித்துள்ளது. ரோவர் சுற்றி வருவதை ஒரு குழந்தையைப் போல் அல்லவா, விக்ரம் லேண்டர் கண்காணித்து வருகிறது’ என்று பதிவிட்டுள்ளது.

https://twitter.com/isro/status/1697156752641536030

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.