பிச்சைக்காரன் 2 படத்தின் முக்கிய அப்டேட் இதுதான்..!

பிச்சைக்காரன் 2 படத்தின் முக்கிய அப்டேட்டை விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம்…

பிச்சைக்காரன் 2 படத்தின் முக்கிய அப்டேட்டை விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது.

பிச்சைக்காரன் 2ம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. பிச்சைக்காரன்-2 படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பட வெளியீடு குறித்த அப்டேட் இருக்கும் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி வெளியிட்டிருந்தார். பிச்சைக்காரன் 2 ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது.

மேலும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் பிக்கிலி  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி  தனது தயாரிப்பில் எடுக்கப்பட்ட ஆய்வுக்கூடம் படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தியதாக  வழக்கை தொடுத்துள்ளார். இந்த வழக்கில் விஜய் ஆண்டனியை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் அடுத்த அப்டேட் நாளை மறுநாள் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் டிவிட்டர் பதிவில் ”இது சத்யாவோட கை “ என எழுதி கோவில் சிலையே நாளை மறுநாள் வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிகிலி பாடல் வெளியான நிலையில் இரண்டாவது பாடலான கோயில் சிலையே பாடல் நாளை வெளியாகும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/vijayantony/status/1645396382243594243

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.