அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்ததுடன், அவதூறாக பேசிய நடத்துநர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிறுத்தம் சென்று பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதியில்லை என நடத்துநர் கூறியுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பேருந்து முன்பு மாற்றுத்திறனாளி சச்சின் சிவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அரசு பேருந்து ஓட்டுநர் மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அரசு பேருந்து நடத்துநர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க என்று சச்சின் சிவா கேட்டுக்கொண்டார். இந்நிலையில் அந்த அரசு பேருந்து நடத்துநர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







