மதுரை மாவட்டம், மேலூரில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோயிலில் ஆடி உற்சவ விழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை மாவட்டம், மேலூர் செக்கடி பஜார் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு
சொந்தமான நாகம்மாள் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி
செவ்வாய்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் ஆடி உற்சவ விழா நடைபெறும்.
இதனையொட்டி, 59ம் ஆண்டு உற்சவ விழா கடந்த 15 நாட்களுக்கு முன் கோயிலில்
காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை சக்தி கரகமும், தொடர்ந்து காப்பு
கட்டி விரதம் மேற்கொண்ட மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் மற்றும் அலகு குத்தியும்
நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலூர் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து
தொடங்கிய இந்த பால்குட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளான, நகைக்கடை பஜார்,
பெரியகடை வீதி, செக்கடி பஜார் வழியாக திருக்கோயிலை வந்தடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய பால், நாகம்மாள் தேவிக்கு மின் மோட்டார்
மூலம் தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நாளை இரண்டாம் நாள்
விழாவாக, சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பூத்தட்டு
ஊர்வலமும், நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. இந்த பால்குட
உற்சவ விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், நகரில் போக்குவரத்து
மாற்றம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கு. பாலமுருகன்