முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வருமான வரித்துறை சோதனை – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

senthil balaji

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அமைச்சர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரில் உள்ள வீடு உட்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கரூர், திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சரின் நண்பர்கள், சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களிலும் சோதனையும் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடைபெறுவதால் திமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் அமைச்சரின் வீட்டருகே குவிந்தவண்ணம் உள்ளனர்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரபட்டியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் வருமானத் துறையினர் முற்றுகையிட்டதால பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மதுபான கடைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக சென்ற போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை. தம்பி மற்றும் அவருடைய நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.  வருமான வரித்துறை சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறேன்” என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் ஆஜர்

Janani

ஊடகத்துறையில் ஷண்முகம் பங்கு அளப்பரியது – அண்ணாமலை இரங்கல்

Dinesh A

அதிமுக அலுவலக கலவர வழக்கு – அனைத்து ஆவணங்களும் மீ்ட்பு

Web Editor