ஈரானில் ஹிஜாப் அணியாததால் இளம்பெண் அடித்துக்கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
சகேஸ் என்ற இடத்தைச் சேர்ந்த மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண், குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை மீறி ஹிஜாப் அணியாமல், அந்த இளம்பெண் சென்றதால், அவரை பெண்கள் சிலர் கடுமையாகத் தாக்கினார். பின்னர் அங்கு வந்த போலீசார், வலுக்கட்டாயமாக மஹ்சா இழுத்துச் சென்று கைது செய்தனர்.
சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில்தான் மஹ்சா அமினி உயிரிழந்ததாகப் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மஹ்சா மரணத்துக்கு நீதி கேட்டுப் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. ஹிஜாப்பை கழற்றி எறிந்து பெண்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சகேஸில், மஹ்சா கல்லறைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர்







