இராமேஸ்வரம் கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை செய்து வழிபாடு

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது குடும்பத்துடன் இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவிலில் குருக்கள் முன்னிலையில் ருத்ராபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி…

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது குடும்பத்துடன் இராமேஸ்வரம்
இராமநாதசாமி திருக்கோவிலில் குருக்கள் முன்னிலையில் ருத்ராபிஷேகம் மற்றும்
சங்காபிஷேகம் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு
முதலாம் ஆண்டு திதி தர்ப்பணம் கொடுப்பாதற்காக நேற்று இரவு இராமேஸ்வரம் வருகை தந்த ஒபிஸ் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கிய அவர் இன்று காலை
குடும்பத்துடன் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் முன்னிலையில்
சங்கல்பம் செய்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி விட்டு, அக்னி தீர்த்த
கடலில் நீராடிவிட்டு, இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலில் உள்ள 22 புண்ணிய
தீர்த்தங்களில் நீராடினார்.

பின்னர் தனியார் மஹாலில் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடத்தினார். பின்னர் இன்று மாலை இராமநாதசாமி கோவிலுக்கு வருகை தந்த ஒபிஸ் திருக்கோவில்
ஏற்பாடு செய்யப்பட்ட ருத்ராபிஷேகம் மற்றும் 108 கங்காபிஷேக பூஜையில்
குடும்பதுடன் பூஜையில் கலந்து கொண்டார்.

பின்னர் பூஜையில் வைக்கபட்ட கலச நீரை இராமநாதசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து விட்டு கார் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் காசிக்கு செல்லும் அவர் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் இரண்டு நாட்களுக்கு பிறகு இராமேஸ்வரம் வருகை தர உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.