கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி பெண் ஒருவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில், சென்னை செல்வதற்காக காத்திருந்த போது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் மிரட்டி கடத்திச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவை அனைத்தும் முன்னுக்குபின் முரணான தகவலாக உள்ளது என்றும், நடத்திய விசாரணையில் அந்த பெண் காதலனை மட்டுமே சந்தித்து சென்றதாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காதலனை மட்டுமே சந்தித்து சென்றதாகவும் காதலனை சிக்க வைக்க இது போன்று நாடகமாடி உள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.







