சிப்காட் நெல் வாணிப கிடங்கில் 1000 நெல் மூட்டைகள் திருட்டு -பாஜகவினர் புகார்

மானாமதுரை சிப்காட் நெல் வாணிப கிடங்கில் ஆயிரம் நெல்மூடைகள் திருடு போனதாக பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நெல் வாணிப கிடங்கு முன்பு அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்…

மானாமதுரை சிப்காட் நெல் வாணிப கிடங்கில் ஆயிரம் நெல்மூடைகள் திருடு போனதாக பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நெல் வாணிப கிடங்கு முன்பு அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிப்காட் நுகர்பொருள் வாணிப நெல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 13 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை சேமித்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடைகளை அதிகாரிகள் துணையோடு மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று விட்டதாக பாஜகவினர் புகார் தெரிவித்து நெல் வாணிப கிடங்கு முன்பு அதிகாரிகளைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்திலும் புகார்
கொடுத்துள்ளனர். எனவே மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து நுகர் பொருள் அதிகாரிகள் கூறுகையில் 12 நெல் மூடைகள் மட்டுமே திருடு போனதாகவும் இது பற்றி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.