‘இட்லி கடை’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த வீடியோ?

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் கசிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரு படங்களை இயக்கி வருகின்றார். இதில்…

A video for Lee from the filming location of 'Itli Kaada'?

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் கசிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரு படங்களை இயக்கி வருகின்றார். இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து உருவாக்கி வருகின்றார் தனுஷ். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அதேபோல், திருச்சிற்றம்பலம் படத்தை போல ஒரு பீல் குட் படமாகவே இட்லி கடை திரைப்படம் உருவாகி வருகின்றதாம். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய் நடித்து வருகின்றார். அருண் விஜய் இப்படத்தில் நெகடிவான ரோலில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் நாயகியாக நித்யா மேனனும், சப்போர்டிங் ரோலில் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இட்லி கடை படப்பிடிப்பின்போது நடிகர் தனுஷ் காட்சியொன்றை விவரிக்கும் விடியோ இணையத்தில் கசிந்ததாக தகவல் வெளியானது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால், உடனே அக்காட்சி இணையத்தில் நீக்கப்பட்டதாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.