முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம் – மாணவருக்கு வலைவீச்சு

புறநகர் ரயிலில் கத்தியை வைத்துக்கொண்டு பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களில் ஒரு மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடிய மற்றொரு மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் புறநகர் ரயில்களில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு பிளாட்பார்மில் தேய்த்துக் கொண்டும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக சமூக வலைதளங்களில் குறுந்தகவல் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் அடிப்படையில் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே இரும்புப்பாதை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். திருவள்ளூர் ரயில் நிலைய நான்காவது நடைமேடையில், படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை சோதனை செய்தனர்.


அப்போது திருவலங்காடு பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவன் தனுஷ் என்பவரிடமிருந்து பட்டா கத்தி பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நிலையில் ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மதன் என்ற மாணவனை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.

மின்சார ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்காக பச்சையப்பன் கல்லூரி சேர்ந்த விஜயகுமார். அரக்கோணம் பாலா. ஊத்துக்கோட்டை தீபக். சந்தோஷ் குமார். திருவள்ளூர் ஆகாஷ் மற்றும் சரத் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதித்தனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது

Halley Karthik

கோலிவுட்டின் கிரீடம் விஜய் கதை

Arivazhagan Chinnasamy

17 ஆண்டுகளாக சினிமாவில் சாதித்துவரும் நயன்தாரா

Arivazhagan Chinnasamy