முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

குடியிருப்பிலிருந்த வளர்ப்பு மாடுகளை கொன்ற புலி; கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

கேரள மாநிலம் மூணாறு அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய புலி தேக்கிட புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

மூணாறு அருகே நயமக்காடு பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று பொது மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் குடியிருப்பிலிருந்த பத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு பசுமாடுகளைப் புலி கடித்துக் கொன்றது. புலியைக் கூண்டு வைத்துப் பிடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்பு அப்பகுதியில் புலியைப் பிடிக்க நான்கு கூண்டுகள் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன் தினம் வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது கூண்டில் சிக்கிய புலி பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் கண் புரை நோயால் பாதிக்கப்பட்டு இடது கண் பார்வை பறி போனது தெரியவந்தது.

இதனை அடுத்துக் கடந்த இரண்டு நாட்களாக மூணாறு வனத்துறை அலுவலகத்தில் புலியைக் கூண்டில் வைத்துக் கண்காணித்து வந்தனர் இறுதியில் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடுமாறு வனத்துறை தலைமை வன உயிரின பாதுகாவலர் மாவட்ட வன அலுவலருக்கு உத்தரவிட்டார்.இதனை அடுத்து புலியை தேக்கடிக்கு வனத்துறையினர் வாகனத்தின் மூலம் கொண்டு சென்றனர்.

தேக்கடி புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 15 கி.மீ.தொலைவில் உள்ள முல்லைகுடி பகுதிக்குக் கூண்டில் அடைக்கப்பட்ட புலியைக் கொண்டு செல்லப்பட்டு கள இயக்குநர் அருண்குமார், மற்றும் மூணாறு மாவட்ட வன அலுவலர் ராஜூ மற்றும் வனச்சரகர் அருண் மகாராஜா ஆகியோர் முன்னிலையில் கூண்டிலிருந்து புலியை வனப்பகுதிக்குள் திறந்து விடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிப்ரவரி 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிப்பு!

Nandhakumar

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு திமுக வலியுறுத்தல்!

Gayathri Venkatesan

‘தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’

Arivazhagan Chinnasamy