முக்கியச் செய்திகள்

பால் குடித்துவிட்டு தூங்கிய மூன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறலால் பலி

பால் குடித்துவிட்டு தூங்கிய மூன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறலால் பலியான சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை அண்ணாநகர் சத்தியசாய் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் எழிலரசன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் எழிலரசனுக்கு திருமணமாகி செளமியா என்ற மனைவியும், மூன்றரை வயதில் தேஜ் என்ற குழந்தையும் உள்ளனர். நேற்று செளமியா குழந்தை தேஜ்க்கு பால் கொடுத்து தூங்கவைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர், செளமியா வழக்கம்போல் வீட்டு வேலை செய்து முடித்துவிட்டு வந்து பார்த்தபோது மெத்தையில் குழந்தை அசைவின்றி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே குழந்தை தேஜை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தபோது மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர், மருத்துவமனை அளித்த தகவலின்பேரில் அண்ணா நகர் போலீஸார் குழந்தை சடலத்தையின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் செளமியா குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டுச் சென்ற பின்னர் குழந்தை தேஜ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இருப்பினும் குழந்தையின் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

Jayasheeba

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை:  கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Halley Karthik

நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி – உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

Arivazhagan Chinnasamy