முக்கியச் செய்திகள் இந்தியா

தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் மூன்றாம் பாலின தம்பதி!

கேரளாவில், மூன்றாம் பாலின தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். இதில் சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறினார். அதேபோல சியா பவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த மூன்றாம் பாலின தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது. சஹத் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அதன்படி மருத்துவ ரீதியாக சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

முதலில் இதற்கு தயங்கினர். பின்னர் சியாவின் அன்பும், தாயாக வேண்டும் என்ற அவரது தீவிர ஆசையும் சஹத்தின் மனதை மாற்றியுள்ளது. இதற்காக அவர்கள் மருத்துவர்களிடமும் ஆலோசனை எடுத்துள்ளனர். மருத்துவ ரீதியாக சஹத்தால் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கையில் இத்தம்பதி இறங்கியுள்ளனர். சிகிச்சையையடுத்து ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய சியா மூலம் சஹத் கருவுற்றார்.

பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக முடிந்துள்ளது. வரும் மார்ச் 4ஆம் தேதி அவர்களுக்கு குழந்தை பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சியா பவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகப்பேறு கால புகைப்படங்களை பதிவு செய்ததோடு ,தங்களின் மூன்று வருட கனவு நிறைவேற போவதாகவும், அம்மா என்ற அழைப்புக்கு காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram