சென்னையில் ஹார்டுவேர் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை மண்ணடியில் உள்ள ‘பாம்பே ஹார்டுவேர்’ குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2.30 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். சென்னை மண்ணடியில் உள்ள முத்துமாரி தெருவில் பிளாஸ்டிக்,…

சென்னை மண்ணடியில் உள்ள ‘பாம்பே ஹார்டுவேர்’ குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2.30 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

சென்னை மண்ணடியில் உள்ள முத்துமாரி தெருவில் பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள் அடங்கிய ‘பாம்பே ஹார்டுவேர்’ பிரைவேட் லிமிடெட் என்ற குடோன் அமைந்துள்ளது. 2000 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த குடோனில் நேற்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சென்னை வட மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தீ விபத்து நடந்த குடோனை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இரவு சுமார் 9 மணிக்கு தொடங்கிய தீயணைக்கும் பணியானது, 2 மணிநேர கடும் போராட்டத்திற்கு பிறகு நிறைவடந்து, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முதற்கட்ட ஆய்வில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தால் வேகமாக பரவிய கரும்புகை, அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குடோனின் அருகாமையில் இருந்த வீடுகளில் அணல் காற்றோடு கரும்புகை பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.