“தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் அணி இதுவரை உருவாகவில்லை” – திருமாவளவன்!

தமிழகத்தில் திமுகவை எதிர்க்கும் அணி இன்னும் உருவாகவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,

“மே 31ஆம் தேதி வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறவிருந்த மதச்சார்பின்மை காப்போம் பேரணி வருகின்ற ஜூன் 14ஆம் தேதி நடைபெறும்.

சிப்காட் தொழிற்பேட்டையின் காரணமாக காற்று, குடிநீர் உள்ளிட்டவை மாசு அடைந்து பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, முதலமைச்சரிடம் கோரிக்கையை முன் வைப்போம்.

திமுக கூட்டணி மட்டும் தான் வடிவம் பெற்ற வலுவான அணியாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் அணி இதுவரை உருவாகவில்லை. அதிமுக –  பாஜக கூட்டணி நீடிக்குமா என்பதே தெரியவில்லை. டாஸ்மாக் ஊழல் என்பது ஒரு கற்பிதம். அதில் ஊழல் நடந்திருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.