திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரிய புளியமரம்
சாய்ந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது – இதனால்
வாகனங்கள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காயம்பட்டு கூட்ரோடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில், திடீரென பெரிய புளியமரம் வேறோடு சாய்ந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மேலும், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முன்னேற முயன்றதால், கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சம்பவம் அறிந்து வந்த செங்கம் காவல் நிலைய உளவு பிரிவு காவலர் செந்தில், தனி ஆளாக நின்று போக்குவரத்தை சரி செய்தார். தொடர்ந்து, போக்குவரத்தை சரி செய்த காவலருக்கு, வாகன ஓட்டிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
—-கு. பாலமுருகன்







