சென்னை மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள கடையில் திடீர் தீ விபத்து!

மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள டீ கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சென்னையை அடுத்த மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் தனியாருக்கு சொந்தமான கார் பழுதுபார்ப்பு நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகே…

மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள டீ கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னையை அடுத்த மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் தனியாருக்கு சொந்தமான கார் பழுதுபார்ப்பு நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகே டீ கடை மற்றும் பல்வேறு கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 3) அதிகாலை மேட்டுக்குப்பம் சாலையில் அமைந்துள்ள டீ கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : ஆனி கிருத்திகை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா!

2 மணி நேரத்திற்கும் மேல் தீயை அணைக்கும் முயற்சியில் மதுரவாயல் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்க முயற்சியை மேற்கொண்டுள்ளனர். மேட்டுக்குப்பம் அருகே டீ கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.