நடிகர் நாசருக்குப் படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக அனைவரையும் கவர்ந்து வரும் நடிகர் நாசர் உடல்நிலை காரணமாக நாசர் சினிமாவிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது அந்தத் தகவலை நாசர் மறுத்தார். அத்துடன், “என் மூச்சு இருக்கும் வரை நான் தொடர்ந்து நடித்துக்கொண்டேதான் இருப்பேன்” என விளக்கமும் கொடுத்திருந்தார். அதன்பிறகு அவர், தொடர்ந்து அவருடைய இயல்பான பயணத்தைத் தொடர்ந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘சென்னையில் பணமோசடியில் ஈடுபட்ட தென் கொரியா நபர் கைது!’
இந்நிலையில் தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடிகை சுஹாசினி, ஹீரோயின், மெஹ்ரீன், சியாஜி ஷிண்டே ஆகியோருடன் படப்பிடிப்பில் இருந்தார் நாசர். அப்போது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி நாசர் காயமடைந்தார். இதனையடுத்து நாசர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், நடிகர் நாசர் நலமாக உள்ளதாகவும், படப்பிடிப்பில் சிறு காயம் தான் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.