பொதுவாகவே பல சரித்திர மற்றும் புராணக்கதைகளை சினிமாவுக்கு ஏற்றவாறு மெறுகேற்றி திரைக்கதை அமைத்து படமாக்குவது மணிரத்ணத்தின் பாணி. மகாபாரதத்தின் கர்ணன் கதையை தளபதியாக வடித்தது, கருணாநிதி – எம்.ஜி.ஆரின் நட்பை பட்டி டிங்கரிங் பார்த்து ‘இருவர்’ படத்தை உருவாக்கியது, இராமாயணத்தைக்கொண்டு ‘இராவணன்’-ஐ எடுத்தது என பல்வேறு சாகசங்களை செய்துள்ளார் மணிரத்னம். மேற்சொன்ன படங்களில் தளபதியை தவிர மற்ற இரண்டு படங்களுமே வசூலில் சொதப்பியது.
இந்நிலையில் கல்கியின் புகழ் பெற்ற சரித்திர புணைவுக்கதையான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வைத்து மணிரத்னம் செய்யும் புதிய சாகசம் தான் ‘பொன்னியின் செல்வன். கல்கி, அதை தொடராக எழுதிய காலத்தில் இருந்தே அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்ட நாவல் அது.இலக்கிய எழுத்தாளர்கள் பலரும் மாங்கு மாங்குவென எழுதிய பல நாவல்களையெல்லாம் முந்து ஆயிரக்கணக்கில் பொன்னியின் செல்வன் பிரதிகள் விற்றுத்தீர்த்தன. எடுத்து வாசிக்கத் தொடங்கினால், கீழே வைக்க விடாத சுவாரஸ்யங்களும் திருப்பங்களும் பரபரப்பும் விறுவிறுப்பும் அந்த நாவலின் அதிசயம். அப்படிப்பட்ட நாவலை மணிரத்னம் எப்படி படமாக்கி இருக்கிறார் என்பதைக் காண ஆவலாக இருக்கிறார்கள் இந்நாவலன் வாசகர்க ரசிகர்கள். ஒருபக்கம் எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் இன்னொரு பக்கம் விமர்சனங்களும் குவிந்தவண்னம் தான் உள்ளன.
தமிழர்களான சோழர்களை வெள்ளைத்தோல்கொண்ட கதாப்பாத்திரங்களைக்கொண்டு காட்டுவதால் தமிழர்களின் ஆதி நிறம் புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. மேலும், இந்த புத்தகம் பலராளும் படிக்கப்பட்டுவிட்டதென்பதால் ஒவ்வருவருக்கும் அதில் வரும் கதைகள் மற்றும் கதாப்பாத்திரங்கள் தொடர்பான கற்பனை அதிகமாக இருக்கிறது. மணிரத்தினத்தின் படம் அந்த கற்பனைக்கு தீணிபோடாமல் போனால் அவர்களின் மத்தியில் அது கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கத்தி மேல் நடப்பது போலான ஒரு சவாலினை செய்துகொண்டிருக்கிறார் மணிரத்னம் என்கிறனர் சினிமா ஆர்வலர்கள். பல திருப்பங்களுடன் நூற்றுக்கணக்கான கதாப்பாத்திரங்களையும் நிறைய துணைக்கதைகளையும் கொண்டுள்ள இந்த நாவலை கொண்டு எடுப்படும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரப்பட்டாளங்கள் இதில் நடிக்கின்றனர். ஒவ்வொரு நடிகர்களும் நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரங்களை பற்றிய விவரங்களை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது படக்குழு. இந்நிலையில் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு எகிறியிருந்தது. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் கண்டுகளிக்கலாம் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. ஹாலிவுட்டின் பெரிய பட்ஜெட் படங்களின் போஸ்டரில் ஐமேக்ஸ் என்று குறிப்பிட்டிருப்பதை பார்த்திருப்போம். கே.ஜி.எஃப் திரைப்படமும் தமிழில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டு இந்த தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் முதல் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஐ மேக்ஸ் தொழில்நுட்பம் என்றால் என்ன? ஏன் இதுவரை அந்த தொழில்நுட்பங்களைக்கொண்டு எந்த தமிழ் படங்களும் உருவாகவில்லை? இதை வைத்து promot செய்யுமளவிற்கு அந்த தொழில்நுட்பத்தில் என்ன இருக்கிறது போன்ற பல்வேறு கேள்விகள் நம்மிடையே எழுதுவது இயல்புதான்.
1970 முதலே ஐமேக்ஸ்(IMAX) எனும் இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் 2000-த்திற்கு பிறகு தான் உலகின் பல்வேறு பகுதிகளிலும் புழக்கத்திற்கு வந்தது. imax என்றாலே image maximum (இமேஜ் மேக்ஸிமம்) தான். காட்சியின் தரம் ( visual quality), அளவு (size), ஒலியின் தரம் (audio quality) இவைகளை பல மடங்கு அதிகப்படியாக கொண்டதே இந்த தொழில்நுட்பம். தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பார்த்த படங்கள் அனைத்தும் 35mm film fomrate-இல் எடுக்கப்பட்டது தான். இந்த format film ரோலுக்கு 21 மில்லி மீட்டர் அகலமும், 18 மீட்டர் உயரமும் இருக்கும். ஒரு அடிக்கு 16 frame-களைக்கொண்ட இந்த film ரோல், ஒரு விநாடிக்கு 24 frame-களை நாம் பார்க்கும் வேகத்தில் ஓடும். இதுவே வீடியோ காட்சிகளாக நமக்கு தென்படுகிறது. இந்த 35mm film frame-ஐ எடுத்துப்பார்த்தால் சதுர ( square) வடிவில் தான் இருக்கும். இதில் பதிவு செய்யப்படும் காட்சிகள் தான் திரையரங்குகளில் சதுர(rectangle) வடிவில் நமக்கு காட்டப்படுகிறது. தியேட்டரில் உள்ள புரஜெட்ரின் லென்ஸ்களால் இதன் காட்சிகள் விரிவாக்கப்பட்டு நமக்கு செவ்வக வடிவத்தில் காட்டப்படுகிறது. இதன்மூலம் இயல்பாகவே அதன் original quality சற்று குறைவதை தவிர்க்கமுடியாமல் போகிறது. சினிமா திரை பெரிதாக இருக்கும் பட்சத்தில் நம்மால் அதை உணரமுடியும்.
இதுவே ஐமேக்ஸ்-ஐ எடுத்துக்கொண்டால் 15/70mm film format-ஐ பயன்படுத்துக்கிறாரகள். அதாவது இந்த film frame-இன் அளவு 70mm உயரமும், 15 mm அகலமும் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதன் மூலம் காட்சிப்படுத்தப்படும் படங்களை ப்ரொஜெக்ட்ரை வைத்து பெரிதாக்க தேவையிலை. 35mm film frame-ஐ விட இது 10 மடங்கு பெரியது. இந்த ஐமேக்ஸ் வடிவில் எடுக்கப்பட்ட காட்சிகளை திரையிடுவதற்காகவே பிரத்யேகமான புரொஜெக்டர்களும் பிம்மாண்ட திரையரங்குகளும் இருக்கின்றது. பிரம்மாண்ட திரையரங்கு என்றால் திரையரங்கின் அளவை மட்டும் குறிப்பதல்லா, அதன் திரையே மூன்றடுக்கு மாடி வீடு அளவுக்கு வானுயர்ந்து காணப்படும். இதன் உயரம் 16 மீட்டரும், அகலம் 22 மீட்டரும் இருக்கும். இதன் மூலமாக இதுவரை நாம் கண்டிராத அற்புதமான காட்சி விருந்து கிடைக்கும். ஒரு யானையை திரையில் கண்டால் கூட அதன் ஒவ்வொரு பாகங்களின் நுணுக்கங்களுடன் அப்படியே நேரில் பார்ப்பது போல் நம்மை மிரட்டிச்சென்றுவிடும். திரையில் இருந்து ஒரு விநாடி கூட நம் கண்ணை எடுக்கமுடியாத வகையில் அதன் காட்சிகள் நம்மை ஆட்கொண்டு விடும். பிரம்மாண்ட திரையோடு முன்பை விட பல மடங்கு துல்லியத்தை கொண்டிருப்பது இதன் மற்றொரு சிறப்பு. மேலும் இதன் ஆடியோ தரமும் முந்தைய தொழில்நுட்பத்தைவிட பல மடங்கு மேம்பட்டது என்பதால் ஐமேக்ஸில் படங்களை கண்டு ரசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை யாராலும் தவிர்க்கமுடியாது.
இந்த பிரம்மாண்ட ஐமேக்ஸ் திரையரங்குகள் சென்னையில் இரண்டு தான் உள்ளது. இந்தியா முழுவதும் 30க்கும் குறைவான திரையரங்குகளே உள்ளன. தமிழகத்தில் இன்னும் சில திரையரங்கு நிறுவனங்களும் ஐமேக்ஸ்-க்கு அப்டேட் ஆகும் முயற்சியில் இறங்கிவருகிறார்கள். மணிரத்னத்தின் கடந்த பல படங்கள் பெரிதாக ஓடாததால் தற்போதைய மார்கெட்டில் அவர் பின் தங்கியே இருக்கிறார். இருப்பினும் பாகுபலி, கே,ஜி,எஃப் போன்ற பான் இந்தியா படங்களின் மாபெரும் வெற்றியை பார்த்து தமிழிலும் அதுபோலான ஒரு படம் வரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு ஆடியன்ஸிடம் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும் அப்படமெல்லாம் உட்சநட்சத்திரங்களை தாண்டி திரைக்கதையின் வித்தையாலேயே மாபெரும் வெற்றி பெற்றது என்பதை நாம் மறுக்கமுடியாது. இந்நிலையில் ஏற்கனவே மக்களிடம் வரவேற்பு பெற்ற நாவலைக்கொண்டு எடுக்கப்படும் இப்படம் நிச்சயம் ஆடியன்ஸை ஏமாற்றாது என்றே கூறப்படுகிறது.இந்நிலையில் பல்வேறு நட்சத்திரப்பட்டாளங்களுடன் 500 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்ப கேமிராக்களில் எடுக்கப்பட்டு திரையிடப்படுவதால் அதை கண்டுகளிக்கும் பிரம்மிப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.







