திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத சென்ற மாணவிக்கு அனுமதி மறுப்பு!

திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி பிரச்சார சபா சார்பில் தமிழ்நாடு முழுவதும் இந்தி தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி…

திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி பிரச்சார சபா சார்பில் தமிழ்நாடு முழுவதும் இந்தி தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் சபானா என்பவர் இந்தி தேர்வு எழுத வந்தார்.

தேர்வு அறையில் கேள்வி தாள்கள் கொடுக்கப்பட்ட பிறகு சபானா ஹிஜாப் அணிந்திருந்ததை கண்ட அதிகாரிகள், அவரை தேர்வு எழுத அனுமதி மறுத்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சபானாவின் உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் குணசேகரன், பள்ளிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சபானாவை தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தினார்.

ஆனால், தான் தேர்வு எழுதும் மன நிலையில் தற்போது இல்லை எனக் கூறி சபானா அங்கிருந்து வெளியேறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.