கூடலூரை அடுத்த அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய
சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியில் தொடர் மழை
காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அசாம் மாநிலத்தை
சேர்ந்த பலர் இப்பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாபிக் என்பவரின் ஏழு வயது
சிறுவன் ஷாபிக் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது
எதிர்பாரதவிதமாக ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
துணை ராணுவ படை வீரர் ஜேம்ஸ் ஆற்றில் குதித்து சிறுவனை காப்பாற்றினார்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரரை அப்பகுதி
மக்கள் பாராட்டி வருகின்றனர்.







