இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு; அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஆந்திர அரசியலில் தனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதாக அறிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைத்…

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஆந்திர அரசியலில் தனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதாக அறிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டி சென்றது. அந்த கோப்பைக்குத் திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பூஜைகள் நடந்தது.

இதனை தொடர்ந்து கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர், இந்தியா சிமெண்ட் சீனிவாசன் மகள் ரூபா குருநாத், சென்னை சூப்பர் அணியின் ஆட்டக்காரர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு ஆகியோர் விஜயவாடா சமீபத்தில் தாடே பள்ளியிலுள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்யை சந்தித்தனர்.

அப்போது முதல்வர் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு
வாழ்த்துக்களையும், ஆசியையும் வழங்கினார். அதன் பின் அம்பத்தி ராயுடுவின் ஆலோசனைப்படி ஆந்திராவில் பெரிய விளையாட்டு மைதானமும், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகள் அமைக்க மாநில் அரசு ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

https://twitter.com/JaganSquad/status/1674320390544572418?s=20

இந்நிலையில், அம்பத்தி ராயுடு, ஆந்திர மாநிலம்  வட்டிச்செருகூர் தொகுதியின் முட்லூர் கிராமத்திற்குச் சென்றபோது உள்ளூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆந்திராவில் விரைவில் அரசியலுக்கு வருவேன். அதற்கு முன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள முடிவு செய்துள்ளேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.

குண்டூரின் கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும், அவற்றை நிறைவேற்ற தன்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் அறிந்து கொள்வதாக கூறினார். “அரசியலில் எப்படிச் செல்வது, எந்தத் தளத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த உறுதியான செயல்திட்டத்துடன் நான் வருவேன்,” என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.