வடகொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரா ட்ராவிஸ் கிங், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
தென்கொரியாவுக்கு சுற்றுலா பயணியாகச் சென்றிருந்த ட்ராவிஸ் கிங், அங்கு தாக்குதல் குற்றச்சாட்டின்பேரில் 2 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் கடந்த ஜூலை மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் அவர் எல்லை கடந்து வடகொரியாவுக்குள் தஞ்சமடைந்தார். கறுப்பின பாகுபாடு காரணமாக தங்கள் நாட்டுக்குள் வந்ததாகவும், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க போவதாக வடகொரியா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ட்ராவிஸ் கிங் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அறிவித்துள்ளளது.
இதுதொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியதாவது : அமெரிக்க வீரரை அதிகாரிகள் பாதுகாத்து அழைத்து வந்துள்ளனர். “தனியார் கிங்கின் நலனில் அக்கறை கொண்டு அயராது உழைத்த குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறோம்.
“கூடுதலாக, [வட கொரியாவில்] அமெரிக்காவின் பாதுகாப்பு சக்தியாக பணியாற்றும் ஸ்வீடன் அரசாங்கத்திற்கும் ஐ.நா.அவைக்கும் நன்றி கூறுகிறோம் என தெரிவித்துள்ளார்.







