நிலநடுக்க எச்சரிக்கை சேவை: இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கூகுள்!

இந்தியாவில் நிலநடுக்க எச்சரிக்கை சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு பூகம்ப எச்சரிக்கை அமைப்பு ஏற்கனவே பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும் போது முன்னெச்சரிக்கையை வழங்க உதவுகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் இனி பூகம்பங்களுக்கான…

இந்தியாவில் நிலநடுக்க எச்சரிக்கை சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு பூகம்ப எச்சரிக்கை அமைப்பு ஏற்கனவே பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும் போது முன்னெச்சரிக்கையை வழங்க உதவுகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் இனி பூகம்பங்களுக்கான எச்சரிக்கைகளை பெறலாம்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் தேசிய நில அதிர்வு மையம் (NSC) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து கூகுள் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நில அதிர்வு வரைபடமாகப் பயன்படுத்தி, உங்கள் ஃபோனை மினி நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவியாக மாற்றுவதன் மூலம் இந்த அமைப்பு செயல்படுகிறது என்று கூகுள் கூறுகிறது.
உங்கள் ஃபோன் சார்ஜ் ஆகி நகராமல் இருக்கும்போது, அது பூகம்பத்தின் முதல் அறிகுறிகளை உணர முடியும். பல தொலைபேசிகள் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் போன்ற நடுக்கத்தை உணர்ந்தால், பூகம்பம் நிகழ்கிறது என்பதையும், அது எங்கே, எவ்வளவு வலிமையானது என்பதையும் கூகுளின் சர்வரால் கண்டுபிடிக்க முடியும்.
பின்னர், கூகுளின் சர்வர் அருகிலுள்ள பிற தொலைபேசிகளுக்கு எச்சரிக்கைகளை  அனுப்புகிறது. நிலநடுக்கத்தின் அளவைப் பொறுத்து, எச்சரிக்கைகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதலாவது, 4.5 அல்லது அதற்கும் அதிகமான நிலநடுக்கத்தின் போது MMI 3 & 4  பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்
மற்றொன்று, ‘டேக் ஆக்ஷன் அலர்ட்’ ஆகும், இது 4.5 அல்லது அதற்கும் அதிகமான அளவில் MMI 5+ பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.மேலும் பூகம்பம் வந்தால் எப்படி தற்காத்து கொள்வது என்ற விழிப்புணர்வு எச்சரிக்கைகளும் இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.