இந்தோனேசியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – 54 பேர் காயம்!

இந்தோனேசியாவில் பள்ளி வாசலில் குண்டுவெடித்ததில் 20 குழந்தைகள் உள்பட 54 பேர் காயம் அடைந்தனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் பிரபல மசூதி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மசூதியில் அனைவரும் வழிபாடு செய்து கொண்டிருந்த போது திடீரென அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன. இதன் பாதிப்பு மசூதியிலும் பள்ளியிலும் எதிரொலித்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்புப்படையினர் உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர். இதில் 20 மாணவர்கள் உள்பட மொத்தம் 54 பேர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த முதற்கட்ட விசாரணையில், பள்ளிவாசலின் ஒலிபெருக்கி அருகில் இருந்து தான் குண்டுகள் வெடித்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்து சில பொம்பை துப்பாக்கிகளை கைப்பற்றி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.