முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம் – முதலமைச்சர் விஜய்

முன்னாள் இந்திய பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்த நாளையொட்டி தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்த நாள் இன்று. இதனையொட்டி தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப் பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது சமூக நீதி வணக்கம்.

சமூக நீதிக்கான அவரது பங்களிப்பும், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பும் இந்திய அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வநாத் பிரதாப் சிங் (1931–2008) டிசம்பர் 1989 முதல் நவம்பர் 1990 வரை இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பணியாற்றினார். ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்திற்காகவும், மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்தியதற்காகவும் இவர் ஒரு முக்கிய அரசியல் ஆளுமையாக அறியப்படுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.