வெனிசுலாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுட்டுள்ளன. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 1,000 முதல் 10,000 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றது. லட்சக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் வெனிசுலா நிலநடுக்க பாதிப்பிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள பேரழிவைக் கண்டு ஆழ்ந்த துயரம் கொள்கிறேன்.
இந்திய மக்களின் சார்பில், வெனிசுலா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதோடு, இக்கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்.
சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.




