பாஜக அரசுக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா?-தமிழக நிதி அமைச்சர் கேள்வி

இலவசங்கள் தொடர்பாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், இலவசங்கள் தொடர்பாக திட்டங்கள் அறிவிப்பதில் பாஜக அரசுக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு…

இலவசங்கள் தொடர்பாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டார்.

அந்தப் பதிவில், இலவசங்கள் தொடர்பாக திட்டங்கள் அறிவிப்பதில் பாஜக அரசுக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி இலவசங்கள் நாட்டு மக்களின் வரிப் பணத்தின் மீது உள்ள சுமை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “நான் இந்த ரேவ்ரி விவாதம் குறித்து குழப்பத்தில் இருக்கிறேன். உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வரும் பிற பாஜக ஆளும் அரசுகளும் பிரதமரின் நிலைப்பாட்டுக்கு எதிராக இல்லையா?

இல்லை பாஜகவுக்கு ஒரு விதியா? எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? அதாவது, பாஜகவுக்கு ஒரு விதி, மற்ற கட்சிகளுக்கு வேறு ஒரு விதியா? இல்லையெனில் நான் செய்வது போல் இல்லாமல், நான் சொல்வதை செய் என்று உள்ளதா? என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவுடன் சில ஊடகங்களில் வெளியான செய்திகளையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து அவர் பகிர்ந்துள்ளார். அவற்றில் பாஜக ஆளும் அரசுகளின் இலவச அறிவிப்புகள் குறித்த செய்தி இடம்பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் 60 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு இலவசமாக பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 11வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் நாட்டு மாடு இனத்தை வாங்குபவர்களுக்கு இலவசமாக 25 ஆயிரம் ரூபாய் மானியமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.