விஜயின் அரசியல் குறித்த கேள்வி; மம்மூட்டி கூறிய பதில் என்ன…?

தவெக தலைவர் விஜயின் அரசியல் குறித்து கேள்விக்கு நடிகர் மம்மூட்டி அளித்த பதில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். 2026 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி விசில் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.

வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. முதல் முறையாக அரசியலில் போட்டியிட்டுள்ள தவெகவிற்கு மக்களிடம் உள்ள ஆதரவை அறிய தமிழ் நாடு அரசியல் களம் காத்துள்ளது.

விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் சார்ந்த திரைத்துறையில் ஆதரவும் விமர்சனமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு காரணமாக சென்னை வந்திருந்த மலையாள நடிகர் மம்மூட்டியிடம், தமிழ் நாடு தேர்தல், விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மம்மூட்டி, “எனக்கு ஒன்றும் தெரியாது”  என்று சுருக்கமாக பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.