அமெரிக்காவிலும் விரைவில் தீபாவளிக்கு பொது விடுமுறை – நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!!

அமெரிக்காவில் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்க வலியுறுத்தி அந்நாட்டு எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளார். இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாழ்வில் உள்ள தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும்…

அமெரிக்காவில் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்க வலியுறுத்தி அந்நாட்டு எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளார்.

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாழ்வில் உள்ள தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும் பெருநாளாக இந்து மக்களால் இந்த பண்டிகை மதிக்கப்படுகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார். இதையடுத்து கடந்த மாதம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : இது தொடர்ந்தால்..? அடுத்த 20 ஆண்டுகளில் நட்சத்திரங்களே தெரியாது – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் எம்பி கிரேஸ் மெங், மசோதா கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறி, அதில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்து போடும்போது சட்டமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.