வி.ஏ.ஓ கொலை சம்பவத்தை கண்டித்து ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லுார்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், இச்சம்பவத்தை கண்டித்தும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாகம் அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் சேர்மபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனகா காளமேகன்







