முற்போக்கான தேசத்திற்கு பெண்களின் ஆரோக்கியத்தில் குடும்பங்கள் முதலீடு செய்ய வேண்டும் -வித்யா பாலன்

முற்போக்கான மற்றும் வெற்றிகரமான தேசத்திற்கு பெண்களின் ஆரோக்கியத்தில் குடும்பங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு மொழிகளில்  நடித்துள்ள நடிகை வித்யா பாலன், கொல்கத்தாவில் …

முற்போக்கான மற்றும் வெற்றிகரமான தேசத்திற்கு பெண்களின் ஆரோக்கியத்தில் குடும்பங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு மொழிகளில்  நடித்துள்ள நடிகை வித்யா பாலன், கொல்கத்தாவில்  65வது அகில இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ஒரு பெண் தன் அடையாளத்தின் பெரும் பகுதியை தன் உடலிலிருந்து பெறுகிறாள். இன்னும் நாம் உடலை  அங்கீகரிக்க விரும்பவில்லை. அதன் ஆசை மற்றும் தேவைகளை அங்கீகரிக்க விரும்பவில்லை.

நாம் அதை போதுமான அளவு கவனிப்பதில்லை. ஒவ்வொரு பெண்ணும் தன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அங்கீகரித்து அதை பேணுதல் வேண்டும்” என்று கூறினார்.

மேகும், கல்வி மற்றும் விழிப்புணர்வுடன் சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்று வித்யா பாலன் கூறினார்.

அத்துடன், “ஒரு பெண் மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போது, ​​அவள் தன் தந்தை, துணை அல்லது மகனை உடன் வருமாறு வலியுறுத்த வேண்டும். எவ்வளவு மக்களை பார்க்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் முன்னேறுகிறார்கள் மற்றும் அணுகுமுறைகள் மாறுகின்றன” என்று  கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.