சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.எஃப்-7 வகை கொரோனா சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்நாட்டில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பி.எஃப்-7 வகை கொரோனா சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்நாட்டில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளும் வேகமாக நிரம்பி வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு தடுமாறி வருகிறது.

இந்நிலையில், சீனாவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.

அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்விற்கு பிறகே அந்த நபருக்கு பி.எஃப்-7 வகை கொரோனா தொற்று உள்ளதா என்பது தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நாளை கொரோனா சிகிச்சை ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஐ.சி.யூ. படுக்கைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டு, இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மருத்துவ துறை சார்ந்த அனைத்து பணியாளர்களும் இதில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.