கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம்-தமிழக அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடிதம்

கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர்…

கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி தமிழக பொதுப் பணித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரிக்க தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கடிதம் எழுதியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கியப் பணிகளை போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை நான்கு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.