வாடகை கேட்டதால் தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்: தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி!

ராமநாதபுரம் அருகே வீட்டின் வாடகை பாக்கி வசூலிக்க சென்ற மூதாட்டியை வழக்கறிஞர் தரக்குறைவாக பேசியதால், மூதாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது மகள்கள் காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர். ராயபுரம் பகுதியில் வசித்து…

ராமநாதபுரம் அருகே வீட்டின் வாடகை பாக்கி வசூலிக்க சென்ற மூதாட்டியை வழக்கறிஞர் தரக்குறைவாக பேசியதால், மூதாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது மகள்கள் காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர்.

ராயபுரம் பகுதியில் வசித்து வருபவர் 58 வயதான விஜயலட்சுமி. இவருக்கு சென்னை
தண்டையார்பேட்டையில் சொந்தமாக உள்ள வீட்டில் வழக்கறிஞர் ஜெயக்குமார் என்பவர் கடந்த 16 ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக ஜெயக்குமார் வீட்டின் வாடகையையும்
மின்சார கட்டணமும் செலுத்தாமல் இருந்த நிலையில் அடிக்கடி விஜயலட்சுமி வாடகை பாக்கியை கேட்டுள்ளார். இதையடுத்து  வழக்கம்போல் காலை விஜயலட்சுமி வாடகை கேட்டு சென்ற போது கதவை  நீண்ட நேரம் தட்டியும் திறக்காமல் இருந்துள்ளாா். பின்னர் கதவை திறந்தவர்களிடம் வாடகை தாருங்கள் அல்லது வீட்டை காலி செய்யுங்கள் என கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் ஜெயக்குமார் வாடகை தர மறுத்தும், வீட்டை காலி செய்ய மறுத்தும் தரக்குறைவாக திட்டியுள்ளார்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி ராயபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பின் மூதாட்டியை மீ்ட்ட அவரது மகள்கள் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அவரது மகள்களான சுகன்யா மற்றும் ஜான்சி  ஆகியோர் கூறியதாவது:

ஏற்கனவே நோயாளியான பெண் என்று கூட பாராமல் ஆபாசமான வார்த்தைக்களால் தரக்குறைவாக திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கி தங்களது தாயை தற்கொலைக்கு தூண்டிவிட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் வீட்டை காலி செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ரூபி.காமராஜ்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.