புதிய வாக்காளர் அடையாள அட்டை முன்னுரிமை அடிப்படையில் ஈரோடு கிழக்கில் முதலில் வழங்கப்படும் என தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் 02-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரால் பறக்கும் படை , கண்காணிப்பு குழு , நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனை நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் புதிய வாக்காளர் அடையாள அட்டை குறித்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்ததாவது..
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போதுமான அளவு ஈரோடு கிழக்கில் உள்ளது
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் இருப்பவர்கள் மாற்றப்படுவார்கள். பணப்பட்டுவாடா குறித்து யாரிடமிருந்தும் இதுவரை புகார் வரவில்லை
இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அளித்துள்ளனர். பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 15 இலட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது புதிய வாக்காளர் அடையாள அட்டை முன்னுரிமை அடிப்படையில் ஈரோடு கிழக்கில் முதலில் வழங்கப்படும்.
வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பித்து புதிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் பழைய அடையாள அட்டையையே பயன்படுத்திக்கொள்ளலாம்” என தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறினார்.
– யாழன்