“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது!

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 14ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், இசை அமைப்பாளர் ரகுமான் இசையில்…

வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 14ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், இசை அமைப்பாளர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலை 6.21 மணிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால், சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா திருத்தேரோட்டம் தொடங்கியது’

இப்படலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார் என்பதால், பாடல் மிகப்பெரிய வெற்றியை அடையும் என சிம்புவின் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், படத்தின் வெளியீட்டுத் தேதி மிக நெருக்கத்தில் உள்ளதால், “வெந்து தணிந்தது காடு” படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நடிகர் சிம்புவின் 9 செண்டிமெண்ட் அவரின் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாடல் ரிலீசிலும் தொடர்வதாக ஒருபக்கம் பேசப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.