கோழிக் கறியை சமைக்காமல் ‘அப்படியே’ சாப்பிடும் வினோத பரிசோதனை…!

ஒரு மனிதன் தனக்கு வயிற்று வலி வரும் வரை கோழி சமைக்காமல் சாப்பிட்டுவதை பரிசோதனையாக தொடர்ந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். ஜான் என்பவர்,  தான் நோய்வாய்ப்படும் வரை நாள்தோறும் பச்சைக்…

ஒரு மனிதன் தனக்கு வயிற்று வலி வரும் வரை கோழி சமைக்காமல் சாப்பிட்டுவதை பரிசோதனையாக தொடர்ந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

ஜான் என்பவர்,  தான் நோய்வாய்ப்படும் வரை நாள்தோறும் பச்சைக் கோழியை உட்கொள்வதை ஒரு  துணிச்சலான பரிசோதனையாக மேற்கொண்டு உள்ளார்.  இதுவரை 17 நாட்களாக பச்சை கோழியை சாப்பிட்டு வரும் நிலையில்,  அதன் வீடியோவை  தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ பதிவுக்கு  ‘ரா சிக்கன் எக்ஸ்பிரிமென்ட்’ என்று பெயரிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் ; கள்ளவழி கருப்பனார் கோயில் முப்பூசைத் திருவிழா: 2,500 கிலோ இறைச்சி; 15,000 பேருக்கு கறி விருந்து!

இதையடுத்து,  அவர் பச்சை முட்டைகள்  மற்றும் பழச்சாறு போன்றவற்றை சாப்பிட்டு  பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார்.  அவரது சமீபத்திய வீடியோவில்,  அவர் ‘சிக்கன் டிக்கா மசாலா,  ஒரு கண்ணாடி குவளை ஜூஸ் மற்றும் பச்சை முட்டைகளை சாப்பிடுவதைக் காணலாம். மேலும், ஜான் என்பவரின் இந்த  துணிச்சலான பரிசோதனை பற்றி அவர் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

“வித்தியாசமான ஒன்றை நான் செய்ய தொடங்கும் முன்,  யாராவது செய்ய வேண்டாம் என்று சொல்லும்போதெல்லாம்,  அது எனக்கு இன்னும் அதிக ஆர்வத்தை தூண்டும். அதேபோல,  இந்த முறை கோழியுடன் இந்த பிரிசோதனைக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் பின்வாங்கவில்லை,   ‘ரா சிக்கன் பரிசோதனையை தொடங்கி இதுவரை 17 நாட்கள் கடந்துள்ளது.  தொடர்ந்து, வயிற்று வலி ஏற்படும் வரை தினமும் கோழியை பச்சையாக சாப்பிடுவதையே உறுதி செய்கிறான்” என தெரிவித்தார்.

https://www.instagram.com/reel/C274VTjRZG3/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.