காவல் நிலைய பொறுப்பாளர் நாற்காலியில் அமர்ந்து மது அருந்திய நபர்; அதிர்ச்சியூட்டும் புகைப்படம்!

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காவல் நிலைய பொறுப்பாளர் நாற்காலியில் அமர்ந்து மது அருந்திய நபரை போலீசார் கைது செய்தனர்.  சஹாரன்பூரில் உள்ள கட்டா கெரி காவல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இம்ரான் என…

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காவல் நிலைய பொறுப்பாளர் நாற்காலியில் அமர்ந்து மது அருந்திய நபரை போலீசார் கைது செய்தனர். 

சஹாரன்பூரில் உள்ள கட்டா கெரி காவல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இம்ரான் என அடையாளம் காணப்பட்ட நபரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் அவர் காவல் நிலைய பொறுப்பாளர் சச்சின் தியாகியின் நாற்காலியில் அமர்ந்து ஒரு கிளாஸ் மதுவை ஊற்றுவது காணப்பட்டது.

புகைப்படத்தில், மேசையில் ‘நொறுக்கு தீனிகள்’  மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.மார்ச் மாதம் ஹோலியின் போது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

இந்த புகைப்படம் காவல்துறையின் கவனத்திற்கு வந்தவுடன், எஸ்எஸ்பி விபின் தடா, சச்சின் தியாகியை உடனடியாக சஸ்பெண்ட் செய்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.