லண்டனில் இருந்து கேரளா வந்த சிறுமிக்கு குரங்கம்மை?

லண்டனில் இருந்து கேரளாவிற்கு வந்த சிறுமி ஒருவர் குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை வைரசானது…

லண்டனில் இருந்து கேரளாவிற்கு வந்த சிறுமி ஒருவர் குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை வைரசானது இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட 79க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்தியாவில் கடந்த 14ம் தேதி கேரளாவை சேர்ந்த ஒருவர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோல், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 2 பேருக்கு இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த மாதம், டெல்லி மற்றும் தெலுங்கானாவிலும் தலா ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியானது. இதன்மூலம், இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் 7 வயது சிறுமி கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்,நேற்று முன்தினம் இரவு லண்டனில் இருந்து வந்த நிலையில் சிறுமிக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மாதிரிகளை பரிசோதனை முடிவுக்கு அனுப்பி முடிவிற்காக எதிர்பார்த்து இருக்கும் நிலையில் தாய் தந்தை உட்பட உறவினர்களும் தனிமை படுத்தபட்டுள்ளனர். கேரளாவில் ஏற்கனவே குரங்கு அம்மை பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.