முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு புதிய நடைமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும். விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் CEO தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
38 மாவட்ட குழுக்கள் தரும் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தலைமையிலான மாநில அளவிலான குழு ஆய்வு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆசிரியராக எவ்வித புகாருக்கும் இடம் தராமல் பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஏற்கனவே விருது பெற்றவர்களை மீண்டும் தேர்வு செய்யக் கூடாது. டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள், அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களை பரிந்துரைக்கக் கூடாது என்று அந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.








