5வயது சிறுவனை இழுத்துச் சென்ற சிறுத்தை : திருமலைக்கு பாதயாத்திரை சென்றபோது பரிதாபம்..!

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பெற்றோருடன் பாதயாத்திரையாக நடந்து சென்ற 5 வயது சிறுவனை சிறுத்தை புலி அடித்து இழுத்து சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.…

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பெற்றோருடன் பாதயாத்திரையாக நடந்து சென்ற 5 வயது சிறுவனை சிறுத்தை புலி அடித்து இழுத்து சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் வழியாகவும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க செல்கின்றனர்.

இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக 5 வயது சிறுவன் பெற்றோருடன் சென்று கொண்டிருந்தான். அப்போது பாய்ந்து வந்த சிறுத்தை புலி ஒன்று அந்த சிறுவனை தாக்கி இழுத்து சென்றது. இதனைக் கண்ட பக்தர்கள் அலறியடித்து குரல் எழுப்பினர்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பக்தர்கள் சேர்ந்து கற்கள் மற்றும் கம்புகளை வீசி எறிந்தனர். இதனையடுத்து சிறுத்தை புலி அங்கிருந்த ஓடியது.

இதன் பின்னர் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு  ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  சிறுவனுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை திருப்பதி தேவஸ்தானம் உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.