வார விடுமுறை – குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்!

சனி, ஞாயிறு வார விடுமுறையை தொடர்ந்து குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வழக்கமாக ஜூன் மாதத்தில் கேரளாவில் பருவ மழை தொடங்கியதும், குற்றலாத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையும் ஆரம்பித்துவிடும். ஆனால் ஜூன்…

சனி, ஞாயிறு வார விடுமுறையை தொடர்ந்து குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

வழக்கமாக ஜூன் மாதத்தில் கேரளாவில் பருவ மழை தொடங்கியதும், குற்றலாத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையும் ஆரம்பித்துவிடும். ஆனால் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து காணப்பட்டது.

ஜூலை மாதம் பிறந்தவுடன் மழை ஆரம்பித்தது. இதனையடுத்து அருவிகளில் நீர் வரத்து அதிகரித்ததால் குற்றாலத்திற்கு செல்லும்  சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

இந்நிலையில், சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனையடுத்து அங்கு ஏராளமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை சற்று குறைந்ததால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று நீராட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.