லேத் பட்டறை தொழிலாளியின் கைவண்ணத்தில் உருவான ஹெலிகாப்டர்!

இடுக்கி அருகே சிறிய ரக ஹெலிகாப்டரை உருவாக்கிய லேத் பட்டறை தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் செருதோணி டபுள் கட்டிங் பகுதியை சேர்ந்த பிஜூ என்பவர் லேத் பட்டறையில்…

இடுக்கி அருகே சிறிய ரக ஹெலிகாப்டரை உருவாக்கிய லேத் பட்டறை தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் செருதோணி டபுள் கட்டிங் பகுதியை சேர்ந்த பிஜூ என்பவர் லேத் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயது முதலே ஹெலிகாப்டர் உருவாக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட அவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான பணியை தொடங்கினார்.

யூடியூப்பை பார்த்தும், தனது சொந்த யோசனைகளை மையப்படுத்தியும் சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் கார் இன்ஜினை வைத்து பெட்ரோலில் இயங்கக்கூடிய சிறிய ரக ஹெலிஹாப்டரை அவர் உருவாகியுள்ளார்.

இதில், ஒருவர் மட்டுமே பயணிக்கும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய பிஜூ, அனைத்து வேலைகளையும் முடித்து விரைவில் ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.