பத்தனம்திட்டா மாவட்டம் கிழவல்லூர் அருகே கேரள அரசு சாலை போக்குவரத்து கழக பேருந்து, கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து ஒரு விபத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சாலையின் திருப்பத்தில் காரும் பேருந்தும் மோதிக்கொண்டதை வீடியோ காட்டுகிறது. பத்தனம்திட்டா மாவட்டம் கிழவல்லூர் அருகே கார் மீது பேருந்து மோதிய இந்த விபத்து சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
https://twitter.com/sirajnoorani/status/1634518144499994624?s=20
கார் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் உள்ள தேவாலயத்தின் சுவரில் மோதியது. இச்சம்பவத்தில் தேவாலயத்தின் கதவு முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பேருந்து கேரள மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்து ஆகும்.







