கோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து புகை வந்ததால், அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து மாலிக்கு கோ ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. 99 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்தனர். வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உடனே விமான ஓட்டிகள் புகை வருவதை தெரிந்து கொண்டதையடுத்து, கோவையில் உள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கோவை விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் இங்கு தரையிறக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோ ஏர்லைன்ஸ் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் உள்ள இரட்டை என்ஜின்கள் அதிகமாக வெப்பம் அடைந்ததால் அலாரம் அடித்துள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பொறியாளர்கள் அதனை சரிபார்த்த பின்னர் மாலத்தீவு நோக்கி அந்த விமானம் சென்றது.
– இரா.நம்பிராஜன்