அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்த கும்பல் கைது!

அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்து, பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்த கும்பலை வனத் துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்தவர் சண்முகம் (63).…

அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்து, பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்த கும்பலை வனத் துறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்தவர் சண்முகம் (63). இவரது வீட்டில் அரிய வகையை சேர்ந்த வலம்புரி சங்குகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு
ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு
காவலர்கள் சண்முகம் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் வீட்டில்
இரு வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து சண்முகம் மற்றும் அவருடன் இருந்த சூரியன் (75), தென்காசியை சேர்ந்த
அருணாச்சலம் மகன் பிரவீன் (38), தங்கவேலு மகன் ராஜன் (44), செல்லையா மகன்
சரவணன் (38), நெல்லையை சேர்ந்த துரைபாண்டி மகன் வீரபெருமாள் (47), ஏர்வாடியை
சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து 1.420 கிலோவும், 1.560 கிலோவும் எடையுள்ள இரு வலம்புரி சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் அவர்கள் வலம்புரி சங்குகளை விற்பனை செய்வதற்காக பல கோடி ரூபாய் பேரம் பேசி வந்ததும் தெரியவந்தது. விசாரணைக்கு பின் 6 பேரையும் வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

—ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.