ஆஸ்கர் நாயகர்களுக்கு விருது வழங்கி வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஆஸ்கர் விருது வென்ற கார்த்திகி கொன்சால்வஸையும், நாட்டு நாட்டு பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித்தையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கி வாழ்த்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது விழா…

ஆஸ்கர் விருது வென்ற கார்த்திகி கொன்சால்வஸையும், நாட்டு நாட்டு பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித்தையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கி வாழ்த்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதுமலை யானைகள் சரணாலய தம்பதிகள் குறித்த ஆவணப்படமான ’தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படம் வென்றது. இந்த படத்தை உதகையை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வஸ் இயக்கியுள்ளார். குனீத் மோங்கா தயாரித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!

அதேபோல் ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆகியோர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இந்த இரண்டு வெற்றிக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலதரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், ஆஸ்கர் விருதாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸையும், ’நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித்தையும் விருது வழங்கி வாழ்த்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.